மாதவரம் புறநகர் பேருந்து நிலையம்
மாதவரம் புறநகர் பேருந்து நிலையம் மாதவரம் பேருந்து நிலையம் | |
---|---|
மாதவரம் புறநகர் பேருந்து நிலையம் | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | உள் வட்டச் சாலை, மாதவரம், சென்னை |
உரிமம் | சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் |
இணைப்புக்கள் | மாநகரப் போக்குவரத்துக் கழகம் |
கட்டமைப்பு | |
தரிப்பிடம் | உள்ளது |
மாற்றுத்திறனாளி அணுகல் | உள்ளது |
வரலாறு | |
திறக்கப்பட்டது | 2018 |
மாதவரம் புறநகர் பேருந்து நிலையம் (Madhavaram Inter-city Bus Terminus) என்பது சென்னையின் துணைப் பேருந்து நிலையமாகும். இது இந்தியாவின், சென்னையில், மாதவரத்தில் உள்ள உள் வட்டச் சாலையில் அமைந்துள்ளது. இது 8 ஏக்கர்கள் (32,000 m2) பரப்பளவில் அமைந்துள்ளது.[1] இது கோயம்பேடு, நகரிலுள்ள சென்னைப் புறநகர் பேருந்து நிலையத்தின் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க கட்டப்பட்டது. இங்கிருந்து ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளுக்கு, திருப்பதி, நெல்லூர், விஜயவாடா, கர்னூல், புட்டப்பர்த்தி, விசாகப்பட்டினம், பத்ராச்சலம் மற்றும் ஹைதராபாத் போன்ற நகரங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.[2] 2018 ஆம் ஆண்டில், இந்த இரு மாநிலங்களுக்கும் தினசரி சராசரியாக 12,500 பயணிகள் பயணித்து வருகின்றனர். தமிழ்நாடு மற்றும் ஆந்திர அரசுகள் தினசரி 315 பேருந்து சேவைகளை இயக்குகின்றன, வார இறுதி நாட்களில் இது மேலும் அதிகரிக்கிறது.[3]
வரலாறு
[தொகு]இந்த முனையம் ₹ 95 கோடி செலவில் 2018 இல் கட்டப்பட்டது.[4] இது 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி க. பழனிச்சாமியால் தொடங்கி வைக்கப்பட்டது.[5]
முனைய வசதிகள்
[தொகு]இந்த முனையம் 8 ஏக்கர்கள் (32,000 m2) ஏக்கர் பரப்பளவில், இரண்டு அடுக்குகளாக கட்டப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் 42 பேருந்துகளுக்கும் மற்றும் மேல் தளத்தில் 50 பேருந்துகளுக்கும் இடமளிக்க முடியும். தனியே நகர பேருந்துகளுக்கு ஒன்பது இடங்கள் உள்ளன. 1,700 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 72 தானூந்துகள் நிறுத்துமிடம் உள்ளன.[6]
ஆறு படிகட்டுக்கள், மூன்று சுமைதூக்கிகள், இரண்டு ஏடிஎம் கவுண்டர்கள், இரண்டு டிக்கெட் கவுண்டர்கள் மற்றும் தகவல் அலுவலகங்கள் உள்ளன. இதனுடன் கூடுதலாக எட்டு கடைகள், ஒரு உணவகம், ஒரு குழந்தை உணவு அறை, ஒரு குடும்பம் காத்திருக்கும் மண்டபம், குழு ஓய்வு அறை, சுகாதார மருத்துவமனை, மருந்தகம் மற்றும் தங்குமிட வசதிகள் உள்ளது.[6]
இந்த முனையத்தில் ஒரு 40,000 லிட்டர் மேல்நிலை தொட்டி, 500,000 லிட்டர் நிலத்தடி நீர், மற்றும் 200,000 லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை மூலம் சேவை அளிக்கப்படுகின்றன.[6]
திருச்சி, திருவண்ணாமலை, அரியலூர்/ஜெயங்கொண்டம், கும்பகோணம், சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், போளூர்/வந்தவாசி, புதுச்சேரி மற்றும் செஞ்சி செல்லும் சில பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.
மேலும் காண்க
[தொகு]- சென்னை புறநகர் பேருந்து நிலையம்
- சென்னை ஒப்பந்த வண்டி பஸ் டெர்மினஸ்
- கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையம்
- சென்னை போக்குவரத்து
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Madhavaram inter-city bus terminus to open in two months". The Hindu (Chennai: Kasturi & Sons). 4 April 2018. https://www.thehindu.com/news/cities/chennai/madhavaram-inter-city-bus-terminus-to-open-in-two-months/article23428510.ece. பார்த்த நாள்: 23 Mar 2019.
- ↑ Kabirdoss, Yogesh (25 March 2018). "Madhavaram bus terminus ready for launch but Kilambakkam facility still in limbo". The Times of India (Chennai: The Times Group). https://timesofindia.indiatimes.com/city/chennai/madhavaram-bus-terminus-ready-for-launch-but-kilambakkam-facility-still-in-limbo/articleshow/64310738.cms. பார்த்த நாள்: 23 Mar 2019.
- ↑ Kabirdoss, Yogesh (25 March 2018). "Madhavaram bus terminus ready for launch but Kilambakkam facility still in limbo". The Times of India (Chennai: The Times Group). https://timesofindia.indiatimes.com/city/chennai/madhavaram-bus-terminus-ready-for-launch-but-kilambakkam-facility-still-in-limbo/articleshow/64310738.cms. பார்த்த நாள்: 23 Mar 2019.
- ↑ . 4 April 2018.
- ↑ "CM inaugurates Madhavaram bus terminus". The Hindu (Chennai: Kasturi & Sons). 11 October 2018. https://www.thehindu.com/news/cities/chennai/cm-inaugurates-madhavaram-bus-terminus/article25185257.ece. பார்த்த நாள்: 23 Mar 2019.
- ↑ 6.0 6.1 6.2 . 4 April 2018.